திருமணமான MLA-வுடன் இரண்டாம் திருமணமா!! நடிகை ரேகா நாயர் பதில்..

திருமணமான MLA-வுடன் இரண்டாம் திருமணமா!! நடிகை ரேகா நாயர் பதில்..

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரியளவில் பேசப்பட்டு வருவது நடிகைகளுக்கு கொடுக்கும் தவறான சீண்டல்கள் பற்றி தான். சமீபத்தில் நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் மன்சூர் அலி கான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. இப்படி நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார். அதன்பின் பயில்வானை அடித்தது குறித்த கேள்விக்கு, நான் அடிக்கவில்லை, ஆனால் ஷூவை கழட்டினேன், அவர் ஓடிவிட்டார் என்று கூறியிருந்தார் நடிகர் ரேகா.

மேலும் ஒரு பேட்டியொன்றில், என்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூப்பிடுபவர்களிடம், பண்ணி என்ன பண்ணுவீர்கள். நான் உங்களுடன் படுப்பேன், எவ்வளவு தருவீங்க, என் உடம்புக்கு அவ்வளவு தான் வேல்யூவான்னு இப்படியெல்லாம் கேட்டு இருக்கிறேன் என்று ரேகா நாயர் கூறியிருந்தார். இந்நிலையில், பெண்களை பற்றி பல விழுப்புணர்வு கருத்துக்களை கூறி வரும் ரேகா நாயர், திருமணமான MLA-வை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் செய்திகள் பரவியது.

இதுகுறித்து ரேகா நாயர், சம்பந்தப்பட்ட எம் எல் ஏ-வின் அப்பா தனக்கு பழக்கமானவர் என்றும் ஒன்றாகத்தான் மாரத்தான் ஓடுவோம். ஒரே ஏரியாவில் குடியிருப்பதால் காலையில் இருவரும் வாக்கிங் போகும் போது அறிமுகமாகினார் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரின் குடும்பத்தினர் அனைவரும் தனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் எனவும் தனக்கு பல எம் எல் ஏக்கள், அமைச்சர்களை தெரியும். வதந்திகளில் வெளியாகும் எம் எல் ஏவும் எனக்கும் திருமணமாகிவிட்டதா என்ற அந்த கேள்விக்கு பதில் வேண்டும் என்றால் நீங்கள் அவரிடமே போய் கேளுங்கள் என்று தெரிவித்துள்ளார் நடிகை ரேகா நாயர்.

ஏற்கனவே, காதலித்து திருமணமாகிய விஷயத்தை நடிகை ரேகா நாயர் பேட்டியொன்றில் கூறியதை அடுத்து இரண்டாம் திருமணம் குறித்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News