பாட்டு பாடாம பாண்டிச்சேரி விட்டு போக முடியாது!! மிரட்டியவருக்கு ஆண்ட்ரியா கொடுத்த பதிலடி...
தென்னிந்திய சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை ஆண்ட்ரியா. ஆயிரத்தின் ஒருவன், வட சென்னை, தரமணி, துப்பறிவாளன், அரண்மனை 3 உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்து வந்தார்.
முன்னணி நடிகர்களின் படங்களில் பாடிய ஆண்ட்ரியா நடிப்பு மட்டும் இல்லாமல் விளம்பரங்கள், கச்சேரிகளில் கலந்து கொண்டும் வருகிறார். சமீபத்தில் நகைக்கடை திறப்பு விழாவிற்காக பாண்டிச்சேரிக்கு சென்றிருக்கிறார்.
அங்கிருந்தவர்கள் பாடல் பாடச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். அதிலும் ஒரு நபர் பாட்டு பாடாம பாண்டிச்சேரி விட்டு போக முடியாது அக்கா என்று கூறியிருக்கிறார். அதற்கு ஆண்ட்ரியா, ஓகே என்று கூறி புஷ்பா படத்தில் அவர் தமிழில் பாடிய ஓ சொல்றியா பாடலை பாடியிருக்கிறார்.
அப்பாடலில் ஆண்கள் புத்தி என்ற வரியை அழுத்தமாக பாடி சைகை கொடுத்திருக்கிறார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டினாலும் இணையத்தில் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.