சின்னதம்பி உன்னை நம்பி.. விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த இளையராஜா.. ஆஹா இது லிஸ்ட்லையே இல்லையே

சின்னதம்பி உன்னை நம்பி.. விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த இளையராஜா.. ஆஹா இது லிஸ்ட்லையே இல்லையே

சென்னை: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி தனித்து போட்டியிட்டிருக்கிறது. மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரவிருக்கின்றன. விஜய் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது அன்றைய தினம் தெரிந்துவிடும். இந்நிலையில் இசைஞானி இளையராஜா விஜய்யின் புகைப்படத்தோடு பகிர்ந்திருக்கும் பாடல் பெரிய பேசுபொருளாகியிருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கும் விஜய் மொத்தம் இரண்டு தொகுதிகளில் களம் கண்டார். மேலும் அவரது கட்சியினர் 231 தொகுதிகளில் போட்ட்யிட்டார்கள். எடப்பாடி தொகுதியில் மட்டும் வேட்பாளர் கடைசி நேரத்தில் மாயமாகிவிட; சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு விஜய் கேட்டுக்கொண்டர். இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியிலேனும் வென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வேலைகளை பார்த்தார். அதேபோல் அவரது கட்சி கண்டிபாக ஆட்சியை பிடிக்குமென தொண்டர்கள் கூறுகிறார்கள்.
 

Ilaiyaraaja Shares Vijay Photo With Song Ahead of Election Results Sparks Buzz

எக்ஸிட் போல்: ஆனால் சில நாட்களுக்கு முன்பு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவெகவுக்கு சாதகமாக இல்லை. பெரும்பாலான ஊடகங்களின் கணிப்பு முடிவில் திமுகவே ஆட்சியமைக்கும் என தெரியவந்தது. ஒன்றிரண்டு கருத்துக்கணிப்பு முடிவுகள் மட்டுமே விஜய் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறுகின்றன. அதை பார்த்தும் உச்சக்கட்ட அப்செட் ஆகிவிட்டார்கள் தவெக தொண்டர்கள். ஆனாலும் இதெல்லாம் போலியானவை; கண்டிப்பாக தவெக எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை பாருங்கள் என உறுதியாக சொல்கிறார்கள்.

விஜய் செய்த பூஜை: விஜய்யும் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு ஆக்டிவ்வாகவே இருக்கிறார். முதலில் சிலரை தனது வீட்டில் சந்தித்த அவர்; அடுத்ததாக திருச்செந்தூர், ஷீரடி சாய் பாபா கோயில்களுக்கு சென்றார். திருச்செந்தூரில் அவர் சத்ரு சம்ஹார பூஜை செய்ததாக தெரிகிறது. அரசியலில் எதிரிகளை அழித்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்தப் பூஜை நடத்தப்படுமாம். கோயில்களுக்கு சென்று வந்த அவர் அடுத்தடுத்து தொண்டர்களுடன் சந்திப்பை நிகழ்த்திவருகிறார்.

நம்பிக்கையில் விஜய்: அந்த ஆலோசனை கூட்டத்தின்போது, 'தேர்தல் முடிவுகள் வந்த பிறகு; வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யாரும் எங்கேயும் செல்லக்கூடாது. அனைவரும் பனையூர் அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும். நான் உங்களை நம்பியிருக்கிறேன். என்னைவிட்டுவிட்டு எங்கேயும் போய்விட மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்" என்றும் கூறியிருக்கிறார். விஜய் இவ்வளவு நம்பிக்கையோடு இருப்பதை பார்த்து தவெகவினர் உற்சாகத்தின் உச்சத்திலேயே இருக்கிறார்கள். உத்தேச அமைச்சரவை பட்டியலையும் அவர்கள் வெளியிட்டார்கள்.

இளையராஜாவின் சப்போர்ட்: திரைத்துறையை பொறுத்தவரை சில ஹீரோக்கள் விஜய்க்கு சப்போர்ட் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இசைஞானி இளையராஜா ஒரு செய்கையை செய்திருக்கிறார். அதாவது இது எங்கள் நீதி என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும் 'சின்னதம்பி உன்னை நம்பி நாடு இருக்கு' என்ற பாடலை விஜய்யின் புகைப்படத்தோடு தனது யூடியூப் தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் படத்தில் விஜய் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தேர்தல் முடிவுகள் வர இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இளையராஜா இப்படி செய்திருப்பதன் மூலம் அவர் விஜய்க்குதான் வாக்களித்திருப்பார் என தவெகவினர் சொல்கிறார்கள்.
 

LATEST News

Trending News

HOT GALLERIES