பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா?
மகா சங்கமம்
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இதில் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீரியல்தான் அழகே அழகு. இந்த சீரியலில் நக்ஷத்ரா, அன்ஷிதா, பிரேம், குறிஞ்சி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தேதி, நேரம்
இந்த நிலையில், அழகே அழகு சீரியலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் மகா சங்கமத்தில் இணைந்துள்ளது. இதற்கு முன் பல சூப்பர்ஹிட் சீரியல்கள் மகா சங்கமத்தில் இணையும்போது கண்டிப்பாக TRP ரேட்டிங் அதிகரித்துள்ளது.

அதே போல் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் அழகே அழகு சீரியலும் மகா சங்கமத்தில் இணைந்துள்ள நிலையில், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வருகிற மே 4ஆம் தேதி முதல் திங்கள் அன்றிலிருந்து சனிக்கிழமை வரை இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்களின் மகா சங்கமம் ஒளிபரப்பாக உள்ளது.
