பெட்ரூம்ல பண்ண வேண்டியதெல்லாம்.. அமலா பால் கணவர் என்ன பண்றாருன்னு பாருங்க.. முடியல!
சென்னை: அமலா பால் நடிகையாக அறிமுகமான முதல் படமே பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதனையடுத்து சுதாரித்துக்கொண்ட அவர் விவகாரம் இல்லாத கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அதன் காரணமாக அவருக்கான மார்க்கெட் சொல்லிக்கொள்ளும்படி உயர்ந்தது. அவர் நடிப்பில் பிஸியாக இருந்தபோது இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து; பிறகு விவாகரத்து செய்துகொண்டார். அடுத்ததாக ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணமும் செய்துகொண்டார்.
கேரளாவை சேர்ந்த் அமலா பால் தமிழில் சிந்து சமவெளி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். சாமி இயக்கியிருந்த அந்தப் படத்தின் கதைக்களமே பிரச்னைக்குரியது என்பதால்; படம் ரிலீஸானதும் பல பேச்சுக்களை அமலா சந்தித்தார். அதனைத் தொடர்ந்து நடித்த மைனா திரைப்படம் மெகா ஹிட்டானது. அமலாவின் நடிப்பும் பாராட்டை பெற்றது. அந்தப் படத்தின் வெற்றியிலிருந்து அமலா பாலின் ரேஞ்சே வேறு ஆகிவிட்டது. விஜய், ஆர்யா, தனுஷ் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கிலும் பிஸியாக இருந்தார்.

விஜய்யுடன் காதல்: ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள், தலைவா ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். அப்போது விஜய்யுடன் காதல் மலர்ந்தது. ஏ.எல்.விஜய்யிடன் குடும்பம் சினிமாவில் நீண்ட பாரம்பரியமிக்கது என்பதால்; முதலில் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எப்படியோ வீட்டு சம்மதத்துடன் இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால் திடீரென அவர்களுக்குள் விவாகரத்து நடந்து பிரிந்துவிட்டார்கள். இந்தப் பிரிவுக்கு பலரும் பல கதைகளை சொன்னார்கள்.
இரண்டாவது திருமணம்: விஜய்யை பிரிந்த அமலா பால் கோவாவில் வைத்து ஜகத் தேசாய் என்பவரை சந்தித்தார். அவர்கள் முதல் சந்திப்பிலேயே அவர்களுக்கிடையே காதல் மலர்ந்துவிட்டது. மேலும் காதல் மலர்ந்த சில காலத்திலேயே அமலா பால் கர்ப்பமும் ஆகிவிட்டார். எனவே திருமணம் செய்துகொண்டார்கள். கர்ப்பமானதால்தான் ஜகத்தை நான் திருமணம் செய்துகொண்டேன் என்று ஒரு பேட்டியில் அம்மணி ஓபனாக சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சியான வாழ்க்கை: ஜகத் தேசாய்க்கும், அமலா பாலுக்கும் இலை என்ற மகனும் இருக்கிறார். இப்போது அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார். கர்ப்பமாக இருக்கும் போது ஆடுஜீவிதம் படத்தில் நடித்தார் அமலா. குழந்தை பிறந்த பிறகு முழுக்க முழுக்க சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பதற்கு அவர் தயாராக இருக்கிறார் என்றும்; மகன் கொஞ்சம் வளர்வதற்காகத்தான் காத்திருக்கிறார் என்றும் தகவல்கள் கசிகின்றன. விரைவில் அவர் மீண்டும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டாகும் வீடியோ: அமலா பாலும், ஜகத்தும் எப்போதுமே ஜாலியாகத்தான் இருப்பார்கள். அந்தவகையில் அவர்கள் தொடர்பான வீடியொ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது இரண்டு பேரும் ஒரு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள். அப்போது அமலாவை அணைத்த ஜகத் தேசாய், அவரை செம ரொமான்ஸோடு கொஞ்சினார். அதை பார்த்து அமலா பால் இதனால்தான் காதலில் விழுந்தார் என்று கூறுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ பெட்ரூமில் செய்ய வேண்டியதை எல்லாம் பப்ளிக்காக செய்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.