ருத்ர தாண்டவம் படத்திற்கு கட் போட்ட சென்சார் போர்டு
திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே குழுவினர் இணைந்திருக்கும் ருத்ர தாண்டவம் படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது.
தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘திரெளபதி’. இப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்.ஜி அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது.
தற்போது அனைத்து பணிகளும் முடிந்து படத்தை சென்சாருக்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.