வலிமை படத்தின் அப்டேட்டுகளை வாரி வழங்கிய தயாரிப்பாளர் போனி கபூர், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

வலிமை படத்தின் அப்டேட்டுகளை வாரி வழங்கிய தயாரிப்பாளர் போனி கபூர், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து இவர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகத்தால் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் இருந்தனர்.

மேலும் தற்போது வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இப்படம் குறித்து பேசியுள்ளார். ஆம், "வலிமை படத்தின் இந்திய படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 15 முதல் முடியவுள்ளது. ஒரு சண்டை காட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது.

போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடந்து வருகிறது, வலிமை படத்தின் வெளியீடு இன்னும் முடிவாகவில்லை" என கூறியுள்ளார்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES