பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் Youtube பிரபலம் - யார் தெரியுமா
விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது.
அதனை தொடர்ந்து உடனடியாக பிக் பாஸ் சீசன் 5 எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துகொண்டு இருக்கின்றனர்.
மேலும் இந்த முறை கமல் ஹாசனுக்கு பதிலாக நடிகர் சிம்பு முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என பேசப்பட்டு வருகிறது.
அதே போல் குக் வித் கோமாளி கனி, அஸ்வின், தர்ஷா, சிவாங்கி, நடிகர் ராதாரவி என பலரின் பெயர்கள் பிக் பாஸ் சீசன் 5ன் போட்டியாளர்கள் பட்டியலில் கூறப்படுகிறது.
இந்நிலையில் Youtube பிரபலம் இனியன் என்பவரிடமும் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும்படி பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனியன் Youtube தளத்தில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.