வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு- ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் பயில்வான்.
சுந்தர் சி யின் முன்னாள் காதல் குறித்து விமர்சகர் பயில்வான் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது கமர்சியல் படங்களால் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் தான் சுந்தர் சி.
இவர் “முறைமாமன்” என்ற படத்தை இயக்கிய போது, நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சுந்தர் சி இயக்குநர் மட்டுமல்ல சில படங்கள் கதாநாயகராகவும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சுந்தர் சி அண்மையில் அளித்த பேட்டியில், “ குஷ்பூ இல்லையென்றால் சௌந்தர்யாவிற்கு ப்ரொபோஸ் செய்திருப்பேன்...” மேலும் இந்த விடயம் குறித்து பல முறை குஷ்புவிடம் கூறியுள்ளேன். இதனால் நான் இயக்கும் படங்களில் சௌந்தர்யாவை நடிக்க வைக்கக் கூடாது என குஷ்பு சத்தியம் வாங்கி விட்டார்.” என்றும் சுந்தர் சி கூறியுள்ளார்.
பேட்டியில் ஓபனாக சுந்தர் சி பேசியது சர்ச்சை கிளப்பியுள்ளது.இதனை தொடர்ந்து விமர்சகர் பயில்வான் சுந்தர் சி குறித்து பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அதாவது, “ நடிகர் சுந்தர் சி இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்தார். இவரிடம் பெரியளவு கிரியேட்டிவிட்டி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. “ உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் தான் முதல் முறையாக ரம்பாவின் தொடையை காட்டினார். ரம்பா தொடை மூலம் முன்னுக்கு வந்தவர் என்றால் அது சுந்தர் சி.
இந்த கதையை மனைவி முன்னுக்கு சொல்லும் அளவிற்கு உங்களுக்கு துளிர் விட்டு போச்சா, வீட்டுக்கு போங்க, குஷ்புவிடம் அடி நிச்சயம் இருக்கு..” என பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பேட்டியை பார்த்த ரசிகர்கள், “ மறைந்த நடிகர்கள் பற்றிய செய்திகளை பரப்புவது தவறு..” என்பது போல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.