தினமும் குடி.. போதைக்கு அடிமையாக இருந்த ஸ்ருதிஹாசன்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.
நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். காரணம் தமிழில் அவரால் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் போனதால் வாய்புகள் குறைந்தது தான்.
இந்த ஆண்டு மூன்று தெலுங்கு படங்களில் நடித்த அவர், அடுத்து ஸ்ருதிஹாசன் தெலுங்கில் சலார் படத்தில் ஹீரோயின் ஆக, பிரபாஸ் ஜோடியாக நடித்து உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஸ்ருதிஹாசன் தான் ஒருகாலத்தில் போதைக்கு அடிமையாக இருந்தது பற்றி பேசி இருக்கிறார்.
தினமும் பார்ட்டிக்கு சென்று குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். நான் drugs பயன்படுத்தவில்லை, ஆனால் ஆல்கஹால் தான் பெரிய விஷயமாக எனக்கு இருந்தது. எப்போதும் நண்பர்கள் உடன் குடித்தேன், அது தான் என்னை control செய்தது.
அதனால் ஒருகட்டத்தில் அதில் இருந்து வெளியில் வர முடிவெடுத்து, என்னை பார்ட்டிக்கு அழைக்கும் நண்பர்களை தவிர்க்க தொடங்கிவிட்டேன்.
தற்போது எட்டு வருடங்களாக குடிபழக்கம் இல்லமால் இருக்கிறேன் என ஸ்ருதிஹாசன் கூறி உள்ளார்.