இதுக்காகவே ஹிந்து பையனை கல்யாணம் பண்ணேன்..! இஸ்லாமிய நடிகை ஷபானா பரபரப்பு தகவல்..!
செம்பருத்தி சீரியலின் மூலம் சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களை பெற்ற நடிகை ஷபானா ஷாஜஹான். மும்பையைச் சேர்ந்தவர். இவர் தனது முதல் சீரியலான செம்பருத்தி தொடரிலேயே பல்லாயிரக்கணக்கான இல்லத்தரசிகள் விரும்பும் நாயகியாக மாறிவிட்டார்.
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் வெளி வந்த செம்பருத்தி சீரியல் பார்வதி என்ற கேரக்டரில் நடித்து டிஆர்பி -யில் அதிக புள்ளிகள் எடுக்கக்கூடிய தொடராக மாற்ற இவரது நடிப்பு பக்க பலமாக இருந்தது.
இந்நிலையில் இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த தொடர் டாப் 5 தொடர்களில் ஒன்றாக இன்று திகழ்கிறது.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆர்யனை காதலித்து கடன் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.
இதனை அடுத்து இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளி வந்து பலரது மனதையும் கவர்ந்தது. இப்போது இவரது கணவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதனை அடுத்து இவர் பேட்டி ஒன்றில் தன் குடும்பம் உள்ளிட்ட பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் செம்பருத்தி சீரியலில் இவர் நடிக்கும் போது பொட்டு வைத்துக் கொண்டதற்காக இவரது குடும்பத்தார் ஓராண்டு காலம் இவருடன் பேசவில்லை என்ற கருத்தை பதிவு செய்திருக்கும் இவர், இந்து பையனை எந்த காரணம் கொண்டு திருமணம் செய்யக்கூடாது என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லி, சொல்லி தன்னை டார்ச்சர் செய்தார்கள் என்பதை கூறி இருக்கிறார்.
இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்த இவரது பெற்றோர்களின் இது போன்ற மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய விஷயத்தை செய்தது ஷபானாவின் மனதில் ஆழமாக பதிந்ததின் காரணத்தாலே, ஒரு இந்து பையனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்
அதனால் தான் அவர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறியிருக்கிறார். மேலும் சமீபத்தில் தன் கணவர் ஆர்யனைனின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடிய இவர்கள் இவர்களது கொண்டாட்டங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்கள்.
அத்தோடு ஆர்யனையின் மனைவியாக இருப்பதற்காக இவர் பெருமைப்படுவதாக இந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது பலரது வாழ்த்துகளையும் பெற்று தந்துள்ளது.