திருமணத்திற்கு பின் கிங்ஸ்லி மனைவி வெளியிட்ட முதல் வீடியோக்காட்சி.. குதூகலத்தின் உச்சக்கட்டம்.
திருமணத்தின் பின் கிங்ஸ்லி மனைவி வெளியிட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.
இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன் சினிமா பிரபலங்கள் பலர் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து கின்ஸிலியின் மனைவி சங்கீதா திருமணத்திற்கு பின் தம்பதிகளாக பார்ட்டியில் கலந்து கொண்ட காட்சியை பகிர்ந்துள்ளார். அதில் இருவரும் ஜோடியாக நடனம் ஆடுகிறார்கள்.

இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ கிங்ஸ்லிக்கு டான்ஸ் எல்லாம் ஆட தெரியுமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.