கொண்டாட்டத்தில் கணவருடன் கலந்து கொண்ட அமலாபால்... வைரலாகும் புகைப்படம்
நடிகை அமலாபால் தனது கணவருடன் தோழியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
மலையாள திரையுலகிலிருந்து, தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகை அமலாபால் பல முன்னணி நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தலைவா படங்களில் நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் வெறும் 3 ஆண்டுகளில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். பின்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து தோல்வியை கண்ட அமலபால் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.
இவர் தயாரிப்பில் உருவான காடவார் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல் வரபேற்பினை பெற்றதுடன், பின்பு தனது நீண்டகால நண்பரான ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
காதலை தெரிவித்த ஒரே வாரத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அமலாபால் தனது தோழியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கணவருடன் வந்து கலந்து கொண்டுள்ளார்.