வருங்கால கணவருடன் நெருக்கமாக அமலா பால்! புகைப்படங்கள் இதோ
பிரபல தென்னிந்திய நடிகையான அமலா பால், தன்னுடைய காதலரான ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறது.
தன்னுடைய பிறந்தநாளின் போது, ஜெகத் தேசாய் நடனமாடி காதலை வெளிப்படுத்த அதை ஏற்றுக்கொண்டார் அமலா பால்.
தெய்வத் திருமகள் படப்பிடிப்பின் போது இயக்குனர் விஜய் மீது காதலில் விழுந்த அமலா பால் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர், இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த அமலா பால், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
அவ்வப்போது வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார், இந்நிலையில் பிறந்தநாளின் போது காதலன் காதலை வெளிப்படுத்த முத்தத்துடன் ஏற்றுக்கொண்டார் அமலா பால்.
பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து செய்திகளை பகிர்ந்ததுடன் விரைவில் திருமண திகதியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.