புன்னகை இளவரசியின் வைரல் புகைப்படங்கள் : 42 வயதிலும் சினேகா எப்படி இருக்காரு பாருங்க

புன்னகை இளவரசியின் வைரல் புகைப்படங்கள் : 42 வயதிலும் சினேகா எப்படி இருக்காரு பாருங்க

42 வயதிலும், இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வரும் நடிகை சினேகா, மஞ்சள் நிற சேலையில் போட்டோ ஷூட் நடத்தி, பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தளத்தில் தற்போது தீயாய் பரவிவருகின்றது. 

முதன் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி பிறகு தமிழில் மாஸ் காட்டிய நடிகைதான் சினேகா.

தமிழில் என்னவளே என்றத் திரைப்படம் மூலம் அறிமுகமானார், ஆனால் அந்தத் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவில் போகாததால் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றார்.

புன்னகை அரசியின் வைரல் புகைப்படங்கள் : 42 வயதிலும் சினேகா எப்படி இருக்காரு பாருங்கபின்னர் விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்து அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார். அதன்பின்னர் அடுத்தடுத்த படங்கள் எல்லாம் ஹிட் கொடுத்தது.

இவரது நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றார்கள். அதனால் அவரை இன்னும் புன்னகை இளவரசி என்ற பட்டப்பெயருடன் தான் ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். 

புன்னகை அரசியின் வைரல் புகைப்படங்கள் : 42 வயதிலும் சினேகா எப்படி இருக்காரு பாருங்க

பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் சினேகா. அதன் பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர அது திரையுலகமே அசந்து போகும் அளவிற்கு திருமணத்தில் முடிந்தது. 

திருமணத்திற்கு பின்னரும், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை சினேகா, பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தளபதி விஜய்யுடன் நடிக்கும் உற்சாகத்தில் இருக்கின்றார். 

இயக்குனர் வெங்கட் பிரபு, தளபதி விஜய்யை வைத்து இயக்க உள்ள 68-ஆவது படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனை படக்குழுவும் சமீபத்தில் இப்படத்தின் காஸ்டிங் குறித்த விவரங்களை வெளியிட்டு உறுதி செய்தது.

புன்னகை அரசியின் வைரல் புகைப்படங்கள் : 42 வயதிலும் சினேகா எப்படி இருக்காரு பாருங்க

மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சினேகா, அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதத்தில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி, அதனை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

LATEST News

Trending News