பல கோடிகளால் கட்டப்பட்ட வீடு...நிஜத்திலும் ராஜ போல வாழும் பாகுபலி பிரபாஸின் மொத்த சொத்து விபரம்

பல கோடிகளால் கட்டப்பட்ட வீடு...நிஜத்திலும் ராஜ போல வாழும் பாகுபலி பிரபாஸின் மொத்த சொத்து விபரம்

பாகுபலி பிரபாஸின் பிறந்த நாளில் அவரின் சொத்து விபரம் வெளியாகி தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு நடிகராக பிரபலமானார்.

பாகுபலி பிரபாஸின் மொத்த சொத்து விபரம்பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு சாஹா மற்றும் ராதே ஷ்யாம் திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. அவ்விரு படங்களும் எதிர்பார்த்த அளவில் வெற்றிப் பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது சலார் பார்ட் - 1, கல்கி, ராஜா டீலக்ஸ் ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாகுபலி பிரபாஸின் மொத்த சொத்து விபரம்தற்போது பிரபாஸிற்கு 44 வயதாகின்ற நிலையில் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் பிரபாஸின் சொத்து விபரம் வைரலாகி வருகின்றது.

நடிகர் பிரபாஸ் தற்போது நடிக்கும் படத்திற்கு சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார். அந்தவகையில் அவரின் சொத்து மதிப்பானது சுமார் 237 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகுபலி பிரபாஸின் மொத்த சொத்து விபரம்

மேலும், இது தவிர 65 கோடி ரூபாயில் பிரம்மாண்ட பண்ணை வீடு வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாது  2 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ், ஒரு கோடி மதிப்புள்ள ஜாகுவார், 60 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் எட்டு கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் என பல சொகுசு கார்களை வாங்கி வைத்திருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES