ஒரு நல்ல படத்தை இப்படியா சொதப்புவது? 'கைதி' இந்தி ரீமேக்கில் ஐட்டம் பாடல்..!

ஒரு நல்ல படத்தை இப்படியா சொதப்புவது? 'கைதி' இந்தி ரீமேக்கில் ஐட்டம் பாடல்..!

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’கைதி’ திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. கார்த்தி வேடத்தில் அஜய் தேவ்கான், காவல்துறை அதிகாரியான நரேன் வேடத்தில் தபு நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இம்மாதம் 30ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ’கைதி’ படத்தில் நாயகி இல்லை என்ற நிலையில் பாடல்களும் இல்லை என்பதும் படத்தின் விறுவிறுப்பான திரைக்தைதான் இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்பதும் தெரிந்ததே.

ஆனால் இந்த படத்தை ரீமேக் செய்யும் பாலிவுட் திரை உலகினர் இந்த படத்தில் அஜய் தேவ்கான் மனைவியாக அமலா பாலை நடிக்க வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலும் இருப்பதாகவும் அந்த பாடலுக்கு ராய் லட்சுமி நடனம் ஆடி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

பாடல்களே இல்லாமல் தமிழில் உருவாக்கப்பட்ட ’கைதி’ படத்தின் ரீமேக்கில் ஐட்டம் பாடலை புகுத்தி இருப்பது ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. தமிழில் ஒரு மிகச்சிறந்த நல்ல படத்தை இப்படியா சொதப்புவது? என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES