திருமணம் எப்போது? வெட்கத்துடன் பதில் கூறிய ஷிவாங்கி!

திருமணம் எப்போது? வெட்கத்துடன் பதில் கூறிய ஷிவாங்கி!

திருமணம் எப்போது என்பது குறித்த கேள்விக்கு வெட்கத்துடன் ஷிவாங்கி கூறிய பதில் தற்போது வைரலாகி வருகிறது .

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான ஆன ஷிவாங்கி அதன் பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது குழந்தைத்தனமான சேட்டை அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திரைப்படங்களிலும் ஷிவாங்கி நடித்து வருகிறார் என்பதும் பல படங்களில் பாடல்கள் பாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ’டான்’ திரைப்படத்தில் ஷிவாங்கியின் கேரக்டர் மிக அபாரமாக இருந்தது என்றும் அவரது நடிப்பு சூப்பர் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது மிகவும் வெட்கப்பட்டுக் கொண்டு ’தனக்கு தற்போது 22 வயதுதான் ஆகிறது என்றும் இப்போதே எப்படி திருமணம் செய்வது என்று எதிர்கேள்வி கேட்ட ஷிவாங்கி, எனது திருமணம் குறித்த தகவல்களை நீங்கள் இன்னும் 8 வருடம் கழித்து தெரிந்து கொள்ளலாம்’ என்றும் அவர் கூறினார்.

LATEST News

HOT GALLERIES