நடிகர் அஜித்தை வீடியோ எடுத்ததால் பறி போன வேலை, கஷ்டத்திற்கு ஆளான பெண் ரசிகை!

நடிகர் அஜித்தை வீடியோ எடுத்ததால் பறி போன வேலை, கஷ்டத்திற்கு ஆளான பெண் ரசிகை!

கடந்த மே மாதம் கொரோனா பரவல் நேரத்தில் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு நடிகர் அஜித் பரிசோதனைக்காக வந்துள்ளார். தீவிர தல அஜித் ரசிகரான பர்ஜானா அப்போது அஜித்தை வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோ சமூகவலை தளத்தில் வெளியாகி நடிகர் அஜித்திற்கு கொரோனாவோ என்ற கேள்விக்குறியுடன் அந்த வீடியோவை ஒரு சிலர் சமூகவலைதளத்தில் பரப்பியதால் பர்ஜானாவை மருத்துவமனை நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

அதனை தொடர்ந்து பர்ஜானாவை அந்த மருத்துவ நிர்வாகம் பணி நீக்கமும் செய்துள்ளது, இதனால் பர்ஜானா மருத்துவமனை தரப்பிடமும் நடிகர் அஜித்தின் மனைவி சாலினியிடமும் மன்னிப்பு கேட்டு முறையிட்டுள்ளார்.

இதனால் கடந்த ஒராண்டாக பணிக்கு செல்ல முடியாமல் இருந்துள்ள பர்ஜானா வயதான தாய் தந்தையை கவணிக்க முடியாமல் இருந்துள்ளார். மேலும் நடிகர் அஜித்தை தொடர்பு கொண்டு நடந்த தகவல்களை தெரிவிக்கலாம் என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தொடர்பு கொண்டுள்ளார்.

 நடிகர் அஜித்திடம் பேசி நிவாரணம் வாங்கி தருவதாக தெரிவித்த சுரேஷ்சந்திரா பிறகு முடியாது என்று மறுத்துள்ளார். அதனால் மனமுடைந்த பர்ஜானா சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பர்ஜானா கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ்சந்திரா மீது ஏமாற்றுதல் ,நம்பிக்கை துரோகம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

LATEST News

Trending News

HOT GALLERIES