5 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஜனநாயகன்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன்.

கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

5 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jananayagan Movie 5 Days Box Office Collection

 

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியானது. முதல் நாளிலிருந்தே உலகளவில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல் 

இந்நிலையில், 5 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 5 நாட்களில் ரூ. 222 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளது.

 

5 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jananayagan Movie 5 Days Box Office Collection

விஜய்யின் முந்தைய திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது இது 5 நாட்களில் குறைவான வசூல் என்றாலும், லீக்கான திரைப்படம் 5 நாட்களில் இவ்வளவு பெரிய வசூலை செய்துள்ளது என்பது மாபெரும் விஷயம் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News