தோற்பேனா.. ஜெயிப்பேனாங்கிறது முக்கியமில்லை.. மீசைய முறுக்கு 2 ரிலீஸ் தேதி வெளியானது!

தோற்பேனா.. ஜெயிப்பேனாங்கிறது முக்கியமில்லை.. மீசைய முறுக்கு 2 ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை: ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் டஜன் கணக்கில் பெரிய படங்கள் வரிசைக் கட்டிக் காத்திருக்கும் நிலையில், முதல் ஆளாக செப்டம்பர் மாதத்தில் சீட் போட்டுள்ளார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி கடந்த 2017ம் ஆண்டு அவரே இயக்கி நடித்து வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் ஹீரோவாக அவருக்கு வெற்றிப் படமாக மாறியது.
அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களை ஓரளவுக்கு கவர்ந்தாலும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், மீண்டும் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக மீசைய முறுக்கு 2 படத்தை கையில் எடுத்துள்ளார்.

மீசைய முறுக்கு 2 ரிலீஸ் தேதி: குஷ்பு சுந்தர் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி தமிழா இயக்கி நடித்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படம் வரும் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்றுமுன் ஆதி வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஹீரோயின்களாக ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஆச்சர் மற்றும் கெத்திகா சர்மா என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

LATEST News

Trending News