ஆம்பளையே வேணாம்.. நோ ஆல்கஹால், நோ பார்ட்டி.. ஃபீல் பண்ணிப் பேசிய யாஷிகா ஆனந்த்!

ஆம்பளையே வேணாம்.. நோ ஆல்கஹால், நோ பார்ட்டி.. ஃபீல் பண்ணிப் பேசிய யாஷிகா ஆனந்த்!

சென்னை: பிக் பாஸ் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட புகழ் யாஷிகா ஆனந்த், சமீபத்திய யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது பிரேக்-அப், பார்ட்டி லைஃப் மற்றும் தன்னை ஏமாற்றிய இயக்குநர் நண்பர்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

அதில், நான் இப்போ ரொம்பவே சிங்கிளாத்தான் இருக்கேன். கடந்த 5, 6 வருஷமாவே நான் யாருடனும் மிங்கிள் ஆகல. என்னுடைய லாஸ்ட் பிரேக்-அப் என்னன்னு உங்க எல்லாருக்குமே நல்லாவே தெரியும். அந்த பிரேக்-அப்புக்குப் பிறகு நான் யாரோடவும் ரிலேஷன்ஷிப்ல இல்லை. இந்த ரிலேஷன்ஷிப், காதல் இதெல்லாம் இப்போ எனக்குத் தேவையே இல்லை. நான் இப்போ ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். என்னை நானே காதலிச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்.

Yashika annand interview

வீட்டுல பார் செட்டப்: இப்போதும் பார்ட்டிக்குச் செல்கிறீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த யாஷிகா, கடந்த 5 வருஷமாகவே எந்தப் பார்ட்டிக்கும் நான் போறதில்லை. ஆனா வழக்கம் போல எங்க வீட்லயே பார்ட்டி நடக்கும். வீட்லயே பார் செட்டப் இருக்கு, லைட் மியூசிக் இருக்கு, ஆல்கஹாலும் இருக்கும். யாரு வேணும்னாலும் வந்து ஜாலியா இருக்கலாம். ஆனா நான் குடிக்க மாட்டேன்.

ஏமாத்திட்டாங்க: சினிமா நண்பர்கள் குறித்துப் பேசிய யாஷிகா, நண்பர்களுக்காக நாம எதுவும் செய்யக் கூடாதுங்கிறதை அனுபவபூர்வமா கத்துக்கிட்டேன். அதுவும் இந்த சினிமா நிறைய விஷயத்தை எனக்கு கத்து கொடுத்துவிட்டது. எனக்குச் சில இயக்குநர் நண்பர்கள் இருந்தாங்க. அவங்க என்கிட்ட வந்து கதை சொல்லும்போது வேற மாதிரி, எனக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்குற மாதிரி கதையைச் சொல்வாங்க. நானும் அட்வான்ஸ் வாங்கிட்டு செட்டுக்கு போய் பார்த்தாதான் தெரியும்... அவங்க சொன்ன கதைக்கும் நான் நடிக்கிற கேரக்டருக்கும் சம்பந்தமே இருக்காது. 'கமிட் ஆகிட்டோமே, வேற வழி இல்லையே'னு அந்தப் படங்கள்ல நடிக்க வேண்டியதாயிடும். அதனால நண்பர்களுக்காக நீங்க உங்க கேரியர்ல எதுவும் விட்டுக்கொடுக்காதீங்க எனத் தனது கசப்பான அனுபவங்களை யாஷிகா ஆனந்த் அந்த பேட்டியில் ஓபனாக போட்டு உடைத்துள்ளார்.
 

LATEST News

Trending News