உடலில் இருக்கும் மச்சத்தை பார்க்கணும்னு சொன்ன நடிகர்.. ஜான்வி கபூரிடம் அத்துமீறல்.. இப்படியும் நடந்ததா?

உடலில் இருக்கும் மச்சத்தை பார்க்கணும்னு சொன்ன நடிகர்.. ஜான்வி கபூரிடம் அத்துமீறல்.. இப்படியும் நடந்ததா?

மும்பை: பாலிவுட்டில் பிஸியாக நடித்துவந்த நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். கடைசியாக அவர் ராம் சரணுக்கு ஜோடியாக பெத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது மட்டுமில்லாமல்; ஜான்வியின் கேரக்டர் ரொம்பவே மோசமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு இயக்குநரும் மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு நேர்ந்த ஒரு மோசமான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

நடிகை ஸ்ரீதேவியின் மகள்களில் ஒருவர் ஜான்வி கபூர். அவர் தடாக் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக ஹிந்தியில் அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும்; புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபிக்கும்வகையில் ஜான்வியின் நடிப்பு அந்தப் படத்தில் பரவலாக பேசப்பட்டது. அவரிடம் நடிப்பு, அழகு என அத்தனையும் இருந்ததால்; கண்டிப்பாக தாய் மாதிரியே இவரும் பல பெரிய வெற்றிகளை பெறுவார் என கணிக்கப்பட்டிருந்தது.

Janhvi Kapoor Reveals Shocking Message From a Bollywood Actor I Want to See All Your Moles

அடுத்தடுத்த வாய்ப்புகள்: ஆனால், அந்தப் படத்துக்கு பிறகு ஜான்வியின் நடிப்பில் ஒரு வருடம் படம் வெளியாகவில்லை. பிறகு 2020ஆம் ஆண்டு கோஸ்ட் ஸ்டோரிஸ், கஞ்சன் சக்சேனா கார்கில் கேர்ள் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அந்தப் படங்களுக்கு பிறகு தொடர்ந்து பாலிவுட்டில் வளர ஆரம்பித்தார். அவருக்கென்று தனி மார்க்கெட்டும், தனி ரசிகர் கூட்டமும் சேர்ந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பான் இந்தியா ஹீரோயின்: ஸ்ரீதேவி எப்படி பான் இந்தியா ஹீரோயினாக கலக்கினாரோ அதேபோல் ஜான்வியும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் அவரது தென்னிந்திய திரையுலக அறிமுகம் தெலுங்கு படத்தின் மூலம் நடந்தது. ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக அவர் நடித்திருந்த தேவரா திரைப்படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது.

பெத்தி ஜான்வி: அடுத்ததாக பெத்தி திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்தார். கடந்த மாதத்தில் வெளியாகியிருந்த அந்தப் படம் மோசமான தோல்வியை சந்தித்தது. முக்கியமாக,ஜான்வியின் ரோல் ரொம்பவே கவர்ச்சியாகவும், பெண்கள் என்றாலே போகப்பொருள்தான் என்கிற மைண்ட் செட்டிலும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். தன்னுடைய கேரக்டர் ஒரு மாதிரி காண்பிக்கப்பட்டதற்கு ஜான்வியும் நெருங்கிய தோழியிடம் வருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்ட இயக்குநர்: அவர் மட்டுமின்றி பலரும் வருத்தமும், ஆத்திரமும் அடைந்தார்கள். இப்போதுதான் தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கான சினிமாக்கள் வருகின்றன. இந்த நேரத்தில் இவ்வளவு பிற்போக்காக ஹீரோயினை இயக்குநர் கையாண்டிருக்கிறாரே என பேச்சுக்கள் எழ; உடனே இயக்குநர் மன்னிப்பும் வருத்தமும் கேட்டார். இந்நிலையில் ஜான்வியின் பேட்டி ஒன்று அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. இதை கேட்ட நடிகையும், ஜான்வியின் சகோதரியுமான குஷி கபூரும் உச்சக்கட்ட ஷாக் ஆனார்.

என்ன பேட்டி?: அவர் கரண் ஜோஹருக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம், எதாவது ஒரு பாலிவுட் நடிகர் ஜொள்ளு விட்டு மெசேஜ் அனுப்பியிருக்கிறாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ஜான்வி, "ஆம். உனது உடலில் அனைத்து மச்சங்களையும் நான் பார்க்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் ஒருவர் மெசேஜ் அனுப்பினார். அந்த நடிகரின் பெயரை சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன்" என்றிருக்கிறார்.

LATEST News

Trending News