அரசியல் கட்சி தொடங்கும் முன் ஒரு அரசியல் படம்.. விஜய்யின் மாஸ் திட்டம்..!

தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சி தொடங்கும் முன்பே அவர் ஒரு மாஸ் அரசியல் படத்தில் நடிக்க இருப்பதாகவும் அது தான் ’தளபதி 68’ படம் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ’தளபதி 68’ படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை இயக்குனர் வெங்கட் பிரபு பார்த்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதால் ஒரு வேடத்திற்கு ஜோதிகா ஜோடியாகவும் இன்னொரு வேடத்திற்கு பிரியங்கா மோகன் ஜோடியாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் ஒரு அரசியல் திரில்லர் படம் என்றும் கூறப்படுகிறது. விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு மாஸ் அரசியல் படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பின், அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பதே விஜய்யின் மாஸ்டர் பிளான் என்றும் கூறப்படுகிறது.
 
                         
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        