என்னை பற்றி வரும் அந்த தகவல் உண்மையில்லை!! நடிகை மாளவிகா மோகனன் விளக்கம்..

என்னை பற்றி வரும் அந்த தகவல் உண்மையில்லை!! நடிகை மாளவிகா மோகனன் விளக்கம்..

இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

என்னை பற்றி வரும் அந்த தகவல் உண்மையில்லை!! நடிகை மாளவிகா மோகனன் விளக்கம்.. | Malavika Mohanan Put Big Full Stop To Rumour News

கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தார். தற்போது, தமிழில் சர்தார் 2 படத்திலும் தி ராஜா சாப் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மாளவிகா மோகனன் அடுத்ததாக இயக்குநர் பாபி கொல்லி இயக்கவுள்ள மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இது முற்றிமும் வதந்தி என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.

என்னை பற்றி வரும் அந்த தகவல் உண்மையில்லை!! நடிகை மாளவிகா மோகனன் விளக்கம்.. | Malavika Mohanan Put Big Full Stop To Rumour News

எக்ஸ் தள பக்கத்தில், சிரஞ்சீவி சாருடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலாக இருக்கிறேன். ஆனால், பாபி சார் இயக்கும் மெகா 158 படத்தில் நான் நடிப்பதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்பதை கூற விரும்புகிறேன். இந்த படத்தில் நான் ஒரு பகுதியாக இல்லை, இந்த தகவல் பொய்யானது என்று கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News