உங்கள் துணை எப்படிப்பட்டவர்!! நடிகை ராஷ்மிகா மந்தனா சொன்ன வார்த்தை..
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

சில தினங்களுக்கு முன் தான் இவர்கள் நிச்சயம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தற்போது தி கேர்ள் பிரண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்துள்ளது.
அப்போது, உங்கள் துணை எப்படிப்பட்டவர் என்று தொகுப்பாளர் கேட்டபோது ராஷ்மிகா மந்தனா, சிரித்துக்கொண்டே, உங்கள் எல்லோருக்கும் பதில் தெரியும் என்று கூறியிருக்கிறார்.