‘அஜித் என்னை நம்பினார், ஆனால்…’
வலிமை படத்தின் வாய்ப்பை இழந்தபோதும், அஜித் என்னை நம்பினார் என்று அறிந்ததில் மகிழ்ச்சி என நடிகர் பிரசன்னா ட்வீட் செய்துள்ளார்.
கதாநாயகன், குணச்சித்திர வேடம், வில்லன் என பல்வேறு பரிணாமங்களில் தோன்றி தான் ஒரு தேர்ந்த நடிகர் நிரூபித்து வருகிறார் நடிகர் பிரசன்னா. கடைசியாக மணிரத்னம் தயாரித்த நவரசா என்ற படத்தில் பிராஜெக்ட் அக்னியில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், வலிமை படத்தின் வாய்ப்பை இழந்தபோதும், தல அஜித் என்னை நம்பினார் என்று அறிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நல்ல காரியங்கள் விரைவில் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.
வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே வேற மாரி மற்றும் கிலிம்பஸ் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. தற்போது இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.