உடையால் அசிங்கப்பட்ட நடிகை சினேகா, இப்படி சொன்னார்களா?.. வருத்தப்பட்ட நடிகை
தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாக மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சினேகா.
கடந்த 2000ம் ஆண்டு வெளியான என்னவளே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கமல், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்தார். சினிமாவில் பீக்கில் இருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
நடிகை சினேகா ஒரு பேட்டியில் தனது உடையால் அசிங்கப்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து கூறியுள்ளார். அதில் அவர், நான் ஒருமுறை பயன்படுத்திய ஆடையை மறுபடியும் அணிய மாட்டேன்.
காரணம் ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் அணிந்து ஒரு நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது ஒரு மீடியா பக்கத்தில் எனக்கு உடை இல்லை, அதனால் போட்ட ஆடையை மீண்டும் அணிந்து வருகிறார் என எழுதினார்கள்.
அன்று முதல் ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் அணிய கூடாது என முடிவு எடுத்தேன்.
நான் எடுப்பது அனைத்துமே விலையுயர்ந்த ஆடைகள், ஆனால் ஒருமுறை அணிந்துவிட்டால் நண்பர்களுக்கோ, யாருக்காவது தேவை படுபவர்களுக்கு கொடுத்துவிடுவேன் என கூறியுள்ளார்.