மனோஜை பார்த்து விஜயா சொன்ன விஷயம், அழுது புலம்பும் ரோஹினி.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அவ்வளவாக சுவாரஸ்யமான கதைக்களம் இல்லை.
வித்யாவும் அவரது காதலரும் இடம்பெறும் காட்சிகள் வருகின்றன. அதன்பின் சத்யா மற்றும் முத்து இருவரும் சிட்டி இடத்திற்கு வருவது போல் ஆகிறது, அங்கு முத்து, சிட்டியை மிரட்டிவிட்டு வருகிறார்.
கடைசியாக கிட்சனில் வேலை செய்யும் ரோஹினியை பார்த்து ஸ்ருதி மிகவும் கலாய்க்கிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிவுக்கும் வருகிறது.
பின் நாளைய எபிசோடிற்கான புரொமோவில், ரோஹினி தனது பக்கத்தில் உட்கார்ந்தவுடன் மனோஜ் மாடிக்கு படுக்க செல்கிறார்.
இதனை கண்ட விஜயா, எங்கே செல்கிறாய், உனக்கு தான் இந்த வீட்டில் முழு உரிமை உள்ளது உள்ளே போ என்கிறார். மீண்டும் அறைக்குள் மனோஜ் வந்து படுக்க ரோஹினி அவர் செய்யும் செய்கைகளை கண்டு அழுகிறார்.