உடல் பருமனை குறைக்க பிக்பாஸ் புகழ் சினேகன் மனைவி கன்னிகா எடுக்கும் டயட் என்ன...
பிக்பாஸ் முதல் சீசன் ஒளிபரப்பான போது ஒரு பிரபலத்தின் இன்னொரு முகம் பற்றி தெரிந்துகொண்ட ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
அவர் வேறுயாரும் இல்லை சினேகன் பற்றி தான், அவர் தமிழ் சினிமாவில் எழுதிய பாடல்கள் பற்றி நிகழ்ச்சியின் போது தான் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தது.
அப்போதில் இருந்து சினேகனுக்கு மக்களிடம் நல்ல ரீச் கிடைத்தது.
நிகழ்ச்சியை முடித்த கையோடு தான் காதலித்த வந்த நடிகை கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார். கன்னிகா ரவி வெள்ளித்திரை, சின்னத்திரை என நடித்தவர், ஓவியராகவும் கலக்கி வருகிறார்.
தினமும் காலை தூங்கி எழுந்தவுடன் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிப்பாராம். காலை பெரும்பாலும் 5 வேகவைத்த முட்டைகளை மட்டும் தான் சாப்பிடுவாராம், அதோடு கொஞ்சம் நட்ஸ்.
காலை உணவுக்கு முன்பு முளைக்கட்டிய பச்சை பயிறை கட்டாயம் சாப்பிடுவாராம், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இதை மட்டும் அப்படியே ஃபாலோ செய்து வருகிறாராம்.
இரவில் வேக வைத்த காய்கறி அல்லது எண்ணெய் சேர்க்காமல் செய்த அசைவ உணவுகள் இவை மட்டும் தானாம். 3 வேளையும் உணவுக்கு பிறகு கட்டாயம் வெந்நீர் குடிப்பாராம், காலை நேரத்தில் பால் பொருட்களை எடுத்து கொள்ள மாட்டாராம்.