தேசிய விருது வென்று மக்கள் மனதையும் வென்ற நித்யா மேனனின் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல்
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து அசத்தியவர் நடிகை நித்யா மேனன்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாயகியாக கலக்கிய நடிகைகளின் லிஸ்டில் இவரும் ஒருவர். காதல் காட்சி, நடனம் என படங்கள் தேர்வு செய்து நடிப்பது இல்லாமல் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடிக்கிறார்.
180 என்கிற படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானவர் தனுஷின் திருச்சிற்றம்பலம் என்ற படத்திற்காக சிறந்த நாயகிக்கான விருது எல்லாம் பெற்றார்.
இன்று நடிகை நித்யா மேனன் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அவரது சொத்து மதிப்பு ரூ. 50 முதல் ரூ. 55 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.