7 நாட்களில் வீர தீர சூரன் படம் செய்துள்ள வசூல்..

7 நாட்களில் வீர தீர சூரன் படம் செய்துள்ள வசூல்..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சியான் விக்ரம் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன் பாகம் 2.

சித்தா, சேதுபதி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. துஷாரா விஜயன் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் ஆகியோர் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பல பிரச்சனைகளை கடந்து திரையரங்கில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், 7 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடனத்திருக்கும் வீர தீர சூரன் படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

LATEST News

Trending News