ஒரு வார்த்தைக்கு ரூ. 75 லட்சம் சம்பளம்!! 3 ஆயிரம் கோடி வசூல் பட நாயகன்..
பொதுவாக சினிமாவில் நடிக்க கதாநாயகன்களின் சம்பளம் பல கோடியளவில் இருக்கும். அதிலும் மிகப்பெரிய மார்க்கெட் உள்ள நடிகர்களுக்கு சம்பளத்தை வாரி இறைப்பார்கள்.
அப்படி 60 வயது நடிகர் தான் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அப்படத்திற்காக ஒரு வார்த்தைக்கு சுமார் ரூ. 75 லட்சம் சம்பளமாக பெருகிறாராம். அதுமட்டுமில்லாமல் அவர் நடித்த் படம் 3000 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.
அவர் வேறு யாருமில்லை ஹாலிவுட் நடிகர் கீயானு ரீவ்ஸின் தான். மேட்ரிக்ஸ் படத்தில் நடித்த அவர் சுமார் ரூ. 450 கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கிறார்.
அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கீயானு ரீவ்ஸ், நியோ ரோலில் 638 வார்த்தைகள் மட்டுமே பேசியிருக்கிறார். ஒரு வார்த்தைக்கு ரூ. 75 லட்சம் என்று கணக்கிட்டு சம்பளமாக பெற்றுள்ளார்.
மேலும் அவரின் இன்னொரு படமான ஜான் விக் தற்போது 5வது பாகமும் தயாராகி வருகிறது. ஜான் விக் 4 பாகம் உலகளவில் சுமார் ரூ. 3674 கோடி வரை சம்பளமாக வசூலித்திருக்கிறது.