நடிகை மீனாவின் செம ஆட்டம்: வைரல் வீடியோ

நடிகை மீனாவின் செம ஆட்டம்: வைரல் வீடியோ

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற சீனியர் நடிகர்களுடனும், விஜய், அஜித் போன்ற மாஸ் நடிகர்களுடன் நடித்தவர் நடிகை மீனா.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை மீனா அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களையும், தான் நடிக்கும் படங்களின் ஸ்டில்கள் வெளியீட்டு வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் செம நடனமாடும் காட்சிகளை உள்ளன. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை மீனா தற்போது தமிழில் ’ரவுடிபேபி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கில் ‘சன் ஆஃப் இந்தியா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லாலுடன் மீனா நடிப்பில் உருவான ‘புரோ டாடி’ என்ற படம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.

LATEST News

Trending News