"ஹேப்பி மேரிட் லைஃப் பவி டீச்சர்".. காதலரை கரம்பிடித்த பிரிகிடா சாகா!

"ஹேப்பி மேரிட் லைஃப் பவி டீச்சர்".. காதலரை கரம்பிடித்த பிரிகிடா சாகா!

சென்னை: தமிழ் சினிமா மற்றும் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே பல திருமண வைபவங்கள் நடந்து வருகின்றன. ஆனால், ஒட்டுமொத்தத் தமிழ் இளைஞர்களையும் இணையத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திருமண செய்தி தான் இப்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. யூடியூப் தளத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் ட்ரெண்டாக மாறிய ஆஹா கல்யாணம் வெப் தொடர் மூலம் 'பவி டீச்சர்' என்ற ஒரே ஒரு கதாபாத்திரத்தின் வழியாக ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் இதயங்களையும் கொள்ளையடித்தவர் நடிகை பிரிகிடா சாகா.

யூடியூப் டூ வெள்ளித்திரை: யூடியூப்பில் 'பவி டீச்சர்' ஆக அறிமுகமாகி, தனது சுட்டித்தனமான நடிப்பினாலும் அழகினாலும் குறுகிய காலத்திலேயே பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய பிரிகிடா, தொடர்ந்து வெள்ளித்திரையில், தளபதி விஜயுடன் மாஸ்டர், பார்த்திபனின் வித்தியாசமான படைப்பான இரவின் நிழல், மற்றும் சூரியின் பிளாக்பஸ்டர் படமான கருடன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து, கோலிவுட்டில் தவிர்க்க முடியாத ஒரு வளர்ந்து வரும் நடிகையாக மாறினார்.

Brigida Saga Ananth Ram marriage

ரகசிய காதல்: சினிமாவிலும் சீரியலிலும் பிஸியாக நடித்து வந்த பிரிகிடா, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பெரிய அளவில் வெளியே பேசாமல் இருந்தார். ஆனால், கடந்த ஜூலை மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலை அறிமுகப்படுத்தினார். அவரது காதலர் வேறாருமில்லை... ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த 'மீசையை முறுக்கு' திரைப்படத்தில் ஆதிக்கு தம்பியாக நடித்த ஆனந்த் ராம் தான். இவர் நடிகர் மட்டுமில்லாமல் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை இயக்கியும் உள்ளார்.

காதலை கரம் பிடித்தார்: நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த இவர்கள் இருவரும், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நிச்சயதார்த்தம் முடிந்து சில மாதங்களிலேயே, தற்போது இருவருக்கும் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்ட கோலாகலமான திருமண வைபவம் நடந்து முடிந்துள்ளது. பாரம்பரிய மணக்கோலத்தில் அனந்த் ராமும், பேரழகியாகப் மின்னும் பிரிகிடா சாகாவும் இணைந்து இருக்கும் அழகான திருமணப் புகைப்படங்களை பிரிகிடா தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி, கமெண்ட் பாக்ஸ்களில் வாழ்த்து மழை பொழியத் தொடங்கி உள்ளனர். எங்க மனசை திருடுன பவி டீச்சருக்கு கல்யாணம் ஆயிடுச்சே எனத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
 

LATEST News

Trending News

HOT GALLERIES