சூர்யாவுடன் மோத ரெடியான விஷால்.. ‘மகுடம்’ சூடப் போவது யாரு.. டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யாவுடன் மோத ரெடியான விஷால்.. ‘மகுடம்’ சூடப் போவது யாரு.. டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: இந்த வாரம் தமிழ் சினிமாவில் மாதவன் நடித்த ஜி.டி. நாயுடு மற்றும் லோகேஷ் கனகராஜின் டிசி உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், அடுத்த வாரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சூர்யா, விஷால், கவின் உள்ளிட்ட பிரபலங்கள் பாக்ஸ் ஆபீஸில் நேருக்கு நேர் மோத ரெடியாகி வருகின்றனர்.

ஏற்கனவே சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இசை வெளியீட்டு விழா எல்லாம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையில் விஷால் இயக்கி நடித்துள்ள 'மகுடம்' திரைப்படமும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என்றும் அதன் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பையும் தற்போது விஷால் வெளியிட்டுள்ளார்.

மதகஜ ராஜா தந்த மகத்தான் வெற்றி: 2004ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விஷால் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். 2017ம் ஆண்டு பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான இரும்புத்திரை திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதன் பின்னர் அவர் நடித்த பல படங்கள் ஃப்ளாப் ஆகின. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி மீண்டும் அவருக்கு சூப்பர் வெற்றியை கொடுத்தது. ஆனால், அதன் பிறகு வெளியான ரத்னம் திரைப்படமும் பல்பு வாங்கியது. கடைசியாக கடந்த ஆண்டு பொங்கலுக்கு 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த மதகஜ ராஜா வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை விஷாலுக்கு கொடுத்தது.

இயக்குநரான விஷால்: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2வில் நடிக்க ஆரம்பித்த விஷால், அந்த படத்தை தானே இயக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், அந்த படம் முழுதாக ரெடியாகவில்லை. ஆனால், அதற்கு பதிலாக மகுடம் படத்தை இயக்கி நடித்துள்ள விஷால் அடுத்த வாரம் ஆகஸ்ட் 14ம் தேதி அந்த படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார். விஷாலின் இயக்கத்தில் உருவாகியுள்ள மகுடம் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES