சூரியாவை கல்யாணம் பண்ணும் போது.. இந்த விஷயத்திற்கு பயந்தேன்.. கூச்சமின்றி கூறிய ஜோதிகா..!
தமிழ் சினிமாவை பொருத்தவரை 90 காலகட்டங்களில் உச்சகட்ட நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஜோதிகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். தற்போது இவர் ரீயின்றி கொடுத்து பாலிவுட் வரை சென்று கலக்கி வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனத்தை செலுத்தாத இவர் அதனை அடுத்து திரைப்படங்களில் இரண்டாவது இன்னிங்ஸ் களை கட்ட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் மலையாளத்தில் சமீபத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த “காதல் தி கோர்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ஆனது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு இவருக்கு மிகச்சிறந்த பெயரையும் பெற்றுத் தந்தது. மேலும் சமீபத்தில் தொகுப்பாளர் கோபிநாத் பேட்டியில் கலந்து கொண்ட ஜோதிகா தனது திருமணம், குழந்தை, ரீயின்றி போன்ற பல விஷயங்களை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.
இதில் கோபிநாத் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அதாவது வடநாட்டில் பிறந்த நீங்கள் தமிழ்நாட்டில் மருமகளாக வந்தது உங்களுக்கு சவாலாக இருந்ததா? பயமாக இருந்ததா? கவலையை தந்ததா? என்ற கேள்வி தான் அது.
இந்தக் கேள்விக்கு சற்றும் சளைக்காமல் ஜோதிகா பட்டென்று பதிலை சொல்லி இருக்கிறார். அந்த பதிலில் அவருக்கு பயமாக இருந்தது தான் உண்மை எனக் கூறியிருக்கிறார். மேலும் அதைப்பற்றி விளக்குகையில் எல்லா பெண்களுக்கும் பொதுவாக திருமணம் என்றால் ஒரு பயம் வரும். அது போன்ற பயம் தான் தனக்கும் ஏற்பட்டது என்று கூறி இருக்கிறார்.
மேலும் வேறு எந்த பயமும் அவர்களுக்கு ஏற்படவில்லை. என்னுடைய திருமணத்திற்கு பின்னும் அம்மா தான் எனக்கு ஷூட்டிங்கிற்கு சாப்பாடு கொண்டு வந்து தருவார். இது தான் என் வீடு என்று நினைத்து தான் உள்ளே சென்றேன்.
சூர்யா பலமுறை எனக்கும் என் குழந்தைகளுக்கும் சர்ப்ரைஸ் கொடுப்பார் என்று ஜோதிகா கூறியிருக்கிறார். மேலும் தன் கணவனைப் பற்றி பேசும் போது சூர்யா அப்போதும், இப்போதும் பார்க்கும் போது என்ன சொல்லத் தோன்றும் என்ற கேள்விக்கு ஹீரோவாக இருக்கும் போதும் அதிகம் பேச மாட்டார்.
கணவனாக ஆகிய பின்பும் அதிகம் பேச மாட்டார். இருவரில் யார் ப்ரபோஸ் செய்தோம் என்று கூட தெரியவில்லை. ஐந்து வருட நண்பர்களாக இருக்கும் போது தான் காதல் பூத்தது எனக் கூறியிருக்கிறார்.
இந்த பதிலானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு, அனைவரும் ஜோதிகாவை நினைத்து பெருமைப்பட்டு இருப்பதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.