முதலிரவு.. எப்போ… எப்போ..-ன்னு கேட்டு ஒரே தொல்லை.. கஷ்டமாக இருக்கும்.. ஆனால்..! நடிகை வித்யா பிரதீப் ஓப்பன் டாக்..!
நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் மாஸ் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் அளவுக்கு சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடறும் ஒன்று.
இதில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் வந்தவர் தான் வித்யா பிரதீப். இந்த சீரியலில் இவரது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களிடயே பெருமளவில் பிரபலமானார்.இவர் கேரளா மாநிலதில் உள்ள ஆலப்புழாவில்தான் பிறந்து வளர்த்தார்.
சீரியலில் நடிப்பதற்கு முன் சைவம், பசங்க 2 போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்தான் இவருக்கு நாயகி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே அருண் விஜய் நடித்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.
நாயகி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பேட்டி ஒன்றில் சீரியலில் உங்களுக்கு நடந்த தர்ம சங்கடமான சூழ்நிலை ஏதேனும் இருக்கிறதா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த வித்யா பிரதீப் இருக்கிறது என்று கூறினார். அது என்ன..? என்று கேட்டபோது, நாயகி சீரியலில் எனக்கும் கதாநாயகனுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்ற கேள்வியை எங்கு சென்றாலும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
சீரியல் என்பது அப்படி இப்படி என்று கொஞ்சம் நீளமாகத்தான் செல்லும் எப்போது திருமணம் நடைபெறும் எப்போது அந்த எபிசோடில் அந்த காட்சி ஒளிபரப்பாகும் என்று சீரியல் நடிகர்களுக்கே தெரியாது. ஆனால், எங்கு சென்றாலும் எப்போது உங்களுக்கும் கதாநாயகனுக்கும் திருமணம் நடக்கும் என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
அது கூட பரவாயில்லை. திருமணம் முடிந்த பிறகு எங்கள் இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் உங்களுக்கு எப்போது சாந்தி முகூர்த்தம் நடக்கும் எப்போது உங்களுக்கும் கதாநாயகனுக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடக்கும் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.