அச்சு அசல் அப்படியே யோகி பாபு போலவே இருக்கும் நபர்.. அதிர்ச்சி கொடுக்கும் புகைப்படம்
ஒரு பக்கம் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், மறுபக்கம் சோலோ ஹீரோவாகவும் கலக்கி வருகிறார் யோகி பாபு. 2009ல் தனது திரைப்பயணத்தை துவங்கிய யோகி பாபு இன்று தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரமாக மாறியுள்ளார்.
கடந்த வாரம் கூட இவர் நடிப்பில் குய்கோ எனும் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அயலான், அரண்மனை 4, தளபதி 68, கங்குவா என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் ஒருவரை போல் 7 பேர் இருப்பார்கள் என சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம். அதை நாம் கண்ணில் காணும் போது ஆச்சிரப்பட்டும் இருக்கிறோம்.
அப்படி சமீபத்தில் அனைவரையும் மணிபாலன் என்பவர் ஆச்சிரப்பட்ட வைத்துள்ளார். அச்சு அசல் அப்படியே நடிகர் யோகி பாபு போலவே இருப்பவர் தான் இந்த மணிபாலன். பலரும் இவர் தான் யோகி பாபு என்று நினைத்து செல்பி எல்லாம் கூட எடுத்துக்கொள்வதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதோ அவருடைய புகைப்படம்..