பிக்பாஸ் சௌந்தர்யாவிடம் தனி ரூமில் காட்சி என்ற பெயரில் தவறாக நடந்த நபர், கண்ணீருடன் பகிர்ந்தார்
பிக்பாஸ் நிகழ்ச்சி வருடம் தோறும் விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக நடக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பலரும் தங்களின் கடந்த கால அனுபவங்களை எப்போதாவது எடுத்து வைப்பார்கள்.
அந்த வகையில் கடந்த சீசனில் விசித்ரா தனக்கு நடந்த கொடுமையை எல்லோர் முன்பும் சொல்ல கமல்ஹாசனும் அதற்கு பாராட்டை தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது நடந்த வரும் சீசனில் சௌந்தர்யா நேற்று தான் பல படங்களுக்கு ஆடிசன் சென்றுள்ளேன். அப்படி ஒரு இடத்திற்கு சென்ற போது ஒருவர் ஒரு காட்சியில் நடிக்க சொன்னார்.
தான் ஹீரோ என்னுடன் நடிக்க வேண்டும் என்று சொல்லி, எல்லை மீறி நடக்க தொடங்கிவிட்டார், அந்த நிகழ்வை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை என கண்ணீருடன் அவர் கூறியது பெரும் வருத்தத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.