ரவீந்தரால் எனக்கு இது கிடைக்கல.. கஷ்டம்.. யாரா இருந்தாலும் பகிர ரெடி.. கணவர் முன்பே VJ மகாலட்சுமி பேச்சு..!
VJ மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கிட்டத்தட்ட ஒரு மாதம் இணைய பக்கங்களில் பேசி பொருளாக இருந்தது.
இதில் பலராலும் பேசப்பட்ட விஷயம் என்னவென்றால் தயாரிப்பாளர் ரவிந்தர் ஒரு பணக்காரர் என்ற ஒரே காரணத்திற்காக VJ மகாலட்சுமி அவரை திருமணம் செய்து கொண்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பிஜே மகாலட்சுமி இது குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, ரவீந்தர் ஒரு பணக்காரர் அதனால் தான் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்றெல்லாம் கூறுகிறார்கள். அவரை திருமணம் செய்து கொள்ளும் முன்பே என்னிடம் வசதி இருந்தது. சொகுசு வாழ்க்கையை தான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
ரவீந்தரை திருமணம் செய்த பிறகு தான் எனக்கு சொகுசு வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்ற எந்த ஒரு தேவையும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவரால் எனக்கு ஒண்ணுமே நடக்கல. இப்படி செய்திகள் வரும் போது கஷ்டமாக இருக்கிறது.
ரவீந்தர் ஒரு தயாரிப்பாளர் என்பதால் தான் இப்படியான பேச்சுக்கள் வருகிறது. ஒரு வேலையை ரவீந்தர் தயாரிப்பாளராக இல்லாமல் நான் அவரை திருமணம் செய்து கொண்டு இருந்திருப்பேன்.
ரவீந்தர் மட்டுமல்ல இவர் பேசியது போல வேறு யார் வந்து என்னிடம் பேசி இருந்தாலும் அவர்களுடன் என்னுடைய வாழ்க்கையை நான் பகிர்ந்து கொண்டு இருப்பேன். அதற்கு நான் தயாராக இருந்தேன்.
ஆனால், என்னிடம் பேசியது ரவீந்தர்தான். அவரை தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனாக எனக்கு பிடித்திருந்தது. அவரை திருமணம் செய்து கொண்டேனே தவிர அவரிடம் பணம் இருக்கிறது அவரிடம் வசதி இருக்கிறது என்று நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அப்படியென்றால் நான் இதற்கு முன்னால் ஏதாவது பணக்கஷ்டத்தில் இருந்தேனா..? என்று கேட்டால் கிடையாது. என்னிடம் ஏற்கனவே எல்லா வசதியும் இருக்கிறது.
சொகுசு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். அப்படி இருக்கும் பொழுது நான் ஒரு திருமணம் செய்து கொண்ட பிறகு இவர் பணத்திற்காக திருமணம் செய்து கொண்டார் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது..? என்று தெரியவில்லை என பேசி இருக்கிறார்.
இவர் பேசிய போது, ரவீந்தர் என்னிடம் பேசியது போல வேறு யார் என்னிடம் வந்து பேசி இருந்தாலும் அவர்களுடன் நான் என்னுடைய வாழ்க்கையை பகிர்ந்து கொண்டிருந்திருப்பேன் என VJ மகாலட்சுமி பேசியிருப்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது.