10-வது வாரத்தில் வெளியேற்றப்பட்ட 2 போட்டியாளர்கள்!!
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 69 நாட்களை கடந்து ஒளிப்பரபாகி வருகிறது.
கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்து முடிந்த நிலையில் இந்த வாரம் சத்யா எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் 8 சீசனில் இந்த வாரமும் 2 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார்களாம். முதலில் சத்யா பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிலையில் இரண்டாவதாக யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தர்ஷிகா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்ஷிகா வெளியேறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் விஜே விஷால் ஜோடியை பிரித்துவிட்டீர்களே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.