நடிகர்களுக்கு இதை செஞ்சா.. தனி பேமேண்ட் இருக்கு.. பிரபல நடிகர் குறித்து மேடையில் உளறிய நடிகை
நடிகை சினேகா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர்களுக்கு இதை செய்தால் அதற்கு தனி பேமெண்ட் கிடைக்கும் என பிரபல நடிகரை அருகில் வைத்துக் கொண்டு அவரைப் பற்றி உளறிய சில விஷயங்கள் ரசிகர்களை சிரிப்பலையில் ஆர்த்தி இருக்கிறது.
நடிகை சினேகா கூறியது என்ன..? அந்த நடிகர் யார்..? என்ற சுவாரஸியமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் விரும்புகிறேன்.
இந்த படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை சினேகா. சினிமாவில் நுழைந்த புதிதில் குடும்ப குத்துவிளக்காக நடித்துக் கொண்டிருந்த நடிகை சினேகா ஒரு கட்டத்தில் கிளாமர் குதிரையாக தமிழ் சினிமா ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.
குடும்பப் பாங்கான முக அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சியாக கவர்ச்சி ராணி ஆக இருந்த நடிகை சினேகாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ரசிகர்களால் புன்னகையரசி என அழைக்கப்படும் இவர் தற்போதும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில், தன்னுடைய முதல் படத்தின் ஹீரோவான பிரசாந்துடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பிரசாந்த் குறித்து பேசிய நடிகர் சினேகா படப்பிடிப்பு தளத்தில் இவர் சிறியவர் இவர் பெரியவர் என்று எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் பழகக்கூடிய ஒரு நடிகர் என்றால் அது நடிகர் பிரசாந்த் தான்.
படப்பிடிப்பு தளத்தில் சாப்பிடும் போது படக்குழுவில் பணியாற்றக்கூடிய எல்லோருடனும் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று பிரசாந்த் விரும்புவார். அது எப்படி என்றால்.. அந்த சாப்பிடக்கூடிய இடத்தில் அனைவருமே இருக்க வேண்டும்.
யார் ஒருவர் இல்லை என்றாலும் அவர் எங்கே என்று தேடி அவரை அழைத்துக் கொண்டு வந்த அமர வைத்து அனைவரோடும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார். படப்பிடிப்பு தளத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டுமில்லாமல் அங்கு பணியாற்ற கூடிய அனைவருக்கும் அனைத்து வசதிகளும் இருக்கிறதா…? என்பதை உறுதிப்படுத்துவதில் பிரசாந்த் கவனமாக இருப்பார்.
அந்த அளவுக்கு படத்தின் மீதும் படக்குழுவின் மீதும் மிகுந்த அர்ப்பணிப்பு உள்ள மனிதர் நடிகர் பிரசாந்த் என்று கூறிய அவர். நான் இப்படி பிரசாந்த் பற்றி கூறியதால் இதற்கு தனியாக பேமெண்ட் இருக்கு… அதனால்தான் இப்படி கூறினேன்.என்ன பிரசாந்த்.. பேமெண்ட் ரெடி பண்ணி விட்டீர்களா..? என்று அங்கேயே அவரிடம் கேட்கிறார். இதனை கேட்ட பிரசாந்த் சொல்லி குடுத்த மாதிரிர் கரெக்டா பேசிட்டீங்க.. ஏப்பா யாருப்பா அங்க.. மேடம்க்கு இமீடியட்டா அந்த பேமெண்ட் கொடுத்துடுங்க என்று பகடி செய்கிறார்.. இவர்களுடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.