ஹாலிவுட் ஸ்டைலில் போஸ்.. கண்டிப்பா சினிமாவுல சான்ஸ் கிடைச்சிடும்..!

ஹாலிவுட் ஸ்டைலில் போஸ்.. கண்டிப்பா சினிமாவுல சான்ஸ் கிடைச்சிடும்...!

சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் ஹாலிவுட் ஸ்டைலில் போஸ் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து அவருக்கு கண்டிப்பாக விரைவில் சினிமாவில் சான்ஸ் கிடைத்து விடும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

சின்னத்திரை உலகில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன் என்பதும் பிரபல நடிகர்களின் இசை வெளியீட்டு விழாவையும் அவர் தொகுத்து வழங்கி உள்ளார் என்பதும் தெரிந்ததே.

’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ’நட்சத்திர ஜன்னல்’ ’நீங்களும் நாங்களும்’ ’ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ’கயல்’ என்ற படத்தில் நடித்த சந்திரன் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா ரங்கன் கடந்த சில மாதங்களாக கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அதனால் அவருக்கு ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒன்றரை மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள அஞ்சனா ரங்கன் அவ்வப்போது பதிவு செய்து வரும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் ஹாலிவுட் நடிகைகள் ஸ்டைலில் செம வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கொடுத்துள்ள போஸ் பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வீடியோவுக்கு பல சுவாரஸ்யமான கமெண்ட்ஸ் பதிவாகி வரும் நிலையில் இதே ரீதியில் போனால் கண்டிப்பாக சினிமாவில் இவருக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைத்து விடும் என்று சிலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES