அக்கா தம்பிக்குள் நடக்க கூடாத கன்றாவி.. உச்ச கட்ட வெறியில் டாப்ஸி..
இயக்குனர் கபில் வர்மா இயக்கத்தில் நடிகை டாப்ஸி, விக்கி அரோரா, சுகன்யா தண்டா, ஐஸ்வர்யா சோனார், ஆகியோர் நடித்த ஒரு குறும்படம் தான் நீதிசாஸ்திரா.
இதற்க்கு எதிக்ஸ் என்று அர்த்தம். இந்த படத்தின் கதை ஆரம்பிக்கும் போது படத்தின் ஹீரோயின் டாப்ஸி ஒருவருடன் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சண்டைக்கு என்ன காரணம்..? அந்த சண்டை ஏன் நடக்கிறது..? என்பதை நோக்கி படத்தின் கதை நகர தொடங்குகிறது.
இந்த சண்டைக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு டாப்ஸின் அம்மா இறந்து கிடக்கிறார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்த பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
அப்போது, உறவினர்கள் எல்லோரும் உன் தம்பி எப்போது வருவான்..? அவன் தான் இறுதி சடங்கு காரியங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்… என கேட்க அவன் வரமாட்டான் நானே எல்லாவற்றையும் முன் நின்று செய்கிறேன் என்று டாப்ஸி சொல்லிக்கொண்டிருக்கும் போதே டாப்ஸியின் தம்பி கௌதம் அங்கு வருகிறார்.
இறந்து கிடக்கும் தன் அம்மாவை பார்த்து கதறி துடிக்கிறான். பல ஆண்டுகளாக வீட்டுக்கே வராத இவன் தற்போது இந்த செய்தி கேள்விப்பட்டு வீட்டிற்கு வந்திருக்கிறான்.
ஆனால், அம்மாவின் சடலத்தை பார்த்து கதறும் கௌதமை நடிகை டாப்ஸி ஒரு கட்டையை கொண்டு கடுமையாக தாக்குகிறார். இப்படி அடிப்பதற்கு என்ன காரணம்..? என்ன என்பதை கௌதம் நினைத்துப் பார்க்கிறான்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு டாப்ஸி குங்ஃபூ மாஸ்டராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பலருக்கு சண்டை பயிற்சி கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
அந்த வகுப்பில் மைதிலி என்ற பெண் உட்பட பல பெண்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். மைதிலி மற்றும் தம்பி கௌதம் இருவரும் காதலிக்கிறார்கள். இந்த விஷயம் தெரிந்ததும் தெரிந்தும் கண்டும் காணாமல் விட்டு விடுகிறார் டாப்ஸி.
திடீரென ஒரு நாள் மைதிலி கிளம்புவதற்கு தாமதமாகிய விட டாப்ஸி தனது தம்பி கௌதமை அழைத்து மைதிலியை வீட்டில் டிராப் செய்து விடும்படி சொல்லிவிட்டு தூங்க செல்கிறார்.
மறுநாள் காலையில் மைதிலி கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வருகிறது. அதைக் கேட்டு டாப்ஸி அதிர்ச்சி அடைகிறாள். உடனே தன்னுடைய தம்பிக்கு போன் அழைத்து போன் செய்து என்ன நடந்தது என கேட்கிறார்.
ஆனால் தம்பியின் போன் சுவிட்ச் ஆப் என வருகிறது. போலீசில் புகார் கொடுக்க செல்லும்பொழுது தம்பி கௌதமிடமிருந்து அழைப்பு வருகிறது. அதில் கௌதம், அக்கா நான் மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன்.. நானும் என் நண்பர்களும் தான் மைதிலியை ரேப் செய்தோம்.. அதில் அவள் அந்த இடத்திலேயே மயங்கி இறந்து விட்டால்.. நீ போலீசில் என் தம்பி தான் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் என்று சொன்னால் நான் மாட்டிக்குவேன். அதனால் அதை நீ சொல்லி விடாதே என்று கதறுகிறான்.
இதனால் உச்ச கட்ட கோபத்திற்கு செல்லும் டாப்ஸி என்ன செய்தார்.. தம்பி கௌதம் எப்படி தப்பித்தான்.. மீண்டும் ஏன் அம்மாவின் இறுதி சடங்கிற்கு வந்தான்.. என்ற பரபரப்பு திருப்பங்களுடன் திடுக்கிட வைக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதி கதை.
இந்த குறும்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. விறுவிறுப்பான இந்த குறும்படம் அமேசான் ப்ரைமில் கலக்கிக் கொண்டிருக்கிறது.