இந்தியன் 2 படத்தை பார்த்துவிட்டு கமல் ஹாசன் என்ன சொன்னார் தெரியுமா?

இந்தியன் 2 படத்தை பார்த்துவிட்டு கமல் ஹாசன் என்ன சொன்னார் தெரியுமா?

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்ட பொருட் செலவில் தயாராகி வருகிறது.

இப்படத்தில் சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத்தி சிங் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர். 

இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி என்று கமல் ஹாசன் பதிவிட்டுள்ளார். 

மேலும் கமல் ஷங்கருக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசு அளித்துள்ளார்.

இதோ புகைப்படம். 

இந்தியன் 2 படத்தை பார்த்துவிட்டு கமல் ஹாசன் என்ன சொன்னார் தெரியுமா? உள்ளே பாருங்க | Kamal Haasan Happy With The Output Of Indian 2

 

LATEST News

Trending News

HOT GALLERIES