கேக் வெட்டி கொண்டாடிய ரஜினிகாந்த்-தமன்னா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இது குறித்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்றுடன் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
மேலும் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், தமன்னா, நெல்சன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர் என்பதும் இது குறித்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த மாஸ் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது