பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த ஒருசில நாட்களில் ஷிவினுக்கு கிடைத்த வாய்ப்பு.. ரசிகர்கள் வாழ்த்து..!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த ஒருசில நாட்களில் ஷிவினுக்கு கிடைத்த வாய்ப்பு.. ரசிகர்கள் வாழ்த்து..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பிடித்த ஷிவினுக்கு தற்போது விஜய் டிவி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் பட்டம் வென்றார் என்பதும் விக்ரமனுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது என்பதும், ஷிவினுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மக்களின் மனதை தொட்டவர் ஷிவின் தான் என்றும் திருநங்கை சமூகத்திற்கே ஒரு நன்மதிப்பை பெற்றுக் கொடுத்தவர் என்றும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த ஒரு சில நாட்களில் அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே மறைமுகமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலான ’பாரதி கண்ணம்மா’ கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் ஷிவின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் திரைப்படங்களிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி, தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது என்பது தெரிந்ததே.

LATEST News

Trending News