அதை செய்ய சொல்லி கன்னத்தில் அடித்தார்.. அந்த நடிகர் குறித்து பேசிய பிரபல நடிகை

அதை செய்ய சொல்லி கன்னத்தில் அடித்தார்.. அந்த நடிகர் குறித்து பேசிய பிரபல நடிகை

நடிகர் அஜித் குமார், அதிகம் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டார். சினிமாவை தவிர்த்து மற்ற நேரம் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி 'தனக்கு ரசிகர்கள் மன்றம் எல்லாம் வேண்டாம், முதலில் உங்களுடைய குடும்பத்தை பாருங்கள்' என்று அஜித் தனது ரசிகர்கள் அறிவுரை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகை ஆர்த்தி, அஜித் குறித்து பேசிய  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, ஷூட்டிங்கில் நடிகர் அஜித் நடித்து கொண்டிருக்கும்போது, அங்கு இருந்த ரசிகர் ஒருவர் தலையில் அஜித் பெயரை பச்சை குத்தி கொண்டு "தல தல" என கத்தி கொண்டிருந்தார். அதை பார்த்த அஜித் அவரை அழைத்து, கன்னத்தில் அடித்தார்.

பின்னர் அவர், அந்த ரசிகரிடம் காசு கொடுத்து, "போய் மொட்டை அடித்து வா" என்று கூறினார். அந்த ரசிகர் மொட்டை அடித்து வந்த பின், அஜித் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். "இனி இப்படிச் செய்யக்கூடாது, அன்பு மனசில் இருந்தால் போதும்" என்று அறிவுரை கூறி அனுப்பினார் என ஆர்த்தி கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES