பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்களா? யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்களா? யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்களுக்கும் மேல் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 6வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இது குறித்த முதல் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த வீடியோவில் இருந்து கமல்ஹாசன் தான் 6வது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி நிர்வாகம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களை இறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் 10 பேர் பெண்கள் என்பது தெரியவந்து உள்ளது.

1. இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி

2. விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

3. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி

4. ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா

5. அஜித், சிம்பு விவகாரங்களில் சர்ச்சைக்குள்ளான நடிகை ஸ்ரீநிதி

6. வழக்கு எண் 18/ 9 படத்தில் நடித்த நடிகை மனிஷா யாதவ்

7. குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா

8. இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் பட நடிகை ஷில்பா மஞ்சுநாதன்

9. சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி

10. விஜே அஞ்சனா

மேற்கண்ட 10 பெண் போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது நிகழ்ச்சி தொடங்கும் நாள் அன்று தான் அதிகாரபூர்வமாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News